Tag: சீமான்

பாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்!

லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரைமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் […]

வளர்ச்சியை தடுக்கவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருட்டடிப்பு..!

“எங்கள் வளர்ச்சியை தடுக்கவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் கூட, எங்கள் சின்னத்தை தெளிவாக பதிவிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்” என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்ததாவது, “தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால், நாம் தமிழர் கட்சியின் […]

தம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ !

நேற்று முதல் சமூகவலைதளங்களில் சீமானும் அவருடையக் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் களத்தில் வேலைப் பார்க்கும் நபருக்கு சீட் கொடுக்க சொல்லி அந்த நபர் கேட்க அதற்குக் கோபமாக சீமான் பதிலளிக்கும் படி அந்த ஆடியோ உள்ளதால் அதை சமூக வலைதளங்களில் பரப்பி சீமானை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த ஆடியோவில் ’ ஏய் இந்திராங்கிற பொண்ணுக்கு சீட் […]

நடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு…

நடிகரும், ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் தமிழ்ச்சமூகத்தின் எதிரி ; விரோதி என ரஜினியை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி மக்களை […]

ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளியாக சித்தரித்துவிட்டனர்

நாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை எனவும், ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற […]

சீமான் கைதா? சுற்றி வளைத்த அதிரடிப்படை

நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் இடையே திடீரென போலீசார் தடியடி நடத்தியதும், சீருடை அணிந்த போலீசார்களை நாம் தமிழர் கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றது. இதனையடுத்து சீமான் மீது கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எந்த நேரமும் […]

சீமானின் முகத்திரையை நார் நாராய் கிழித்த வைகோ

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை என்றும் கூறிய வைகோ, சீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெற்றதாகவும் வைகோ கூறியுள்ளார். மேலும் பிரபாகரன் – சீமான் சந்திப்பு வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், விடுதலைப்புலிகளின் சீருடை அணிய கூட சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் […]

படம் மட்டும் பெற்றோர் பணத்தில் பார்க்க வேண்டுமா?

மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் ரஜினி, பெற்றோர் கொடுக்கும் பணத்தில் படம் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். படிக்கும் வயதில் மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினார். செய்தியாளர்களை சந்தித்த சீமான் இதுகுறித்து கூறியதாவது:- ரஜினி சொல்வது போல் தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ரஜினியின் […]

நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி நடிகையான ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54 துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும்போது கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர் குழந்தை […]

கமலின் கட்சிப் பெயர் பைத்தியக்காரத்தனத்தை குறிக்கிறது

கமலின் கட்சிப் பெயரின் விளக்கமானது சுத்த பைத்தியக்காரத்தனத்தை குறிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளரான சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த […]