இனவாதமின்றி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நேற்றைய தினம் நடைபெற்று வரும் மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியதற்காக அவர்களை பிரிவினைவாதிகள் என விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சதித்திட்டத்தின் மூலம் மஹிந்தவும் அவரது சகாக்களும் ஆட்சியை கைப்பற்றி நன்மையடைய […]
Tag: சரத் பொன்சேகா
பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதானே நாம் சொல்ல வேண்டும்!
“பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிலைமைக்குப் போய்விட்டார் என்பதை நினைத்து, அவருக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். மக்கள் இன்று கடும் கொதிப்பில் இருக்கின்றார்கள். அவர்களே, மைத்திரிபாலவை ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். […]
சட்டம், ஒழுங்கு அமைச்சு ஏன் பொன்சேகாவிற்கு மறுக்கப்பட்டது?
இராணுவத்தில் பீல்ட் மார்சல் அதிகாரியாக தொடர்ந்து செயற்பட்டுவரும் ஒருவரை பொலிஸாருக்கு பொறுப்பானவராக நியமிக்க முடியாது. அதனாலேயே சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். சரத் பொன்சேகா கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததாக சுட்டிக்காட்டிய அவர், […]
படையினரை சிறைக்கு அனுப்பாது நல்லாட்சி! – கிரியெல்ல திட்டவட்டம்
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல என்றும், எந்தவொரு படைத்தளபதியையும் நல்லாட்சி அரசு சிறையில் அடைக்காது என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளையின் 23/2இந்த கீழ் மஹிந்த அணியான பொது எதிரணியின் எம்.பி. தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் அரசின் மேற்படி நிலைப்பாட்டை […]
நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவோம்! – மஹிந்த அணி திட்டவட்டம்
முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தயாராகி வருகின்றது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தமிழ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரேரணை மூலம் சரத் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து எதிர்ப்பு […]
சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும் விஜயதாஸ! – வலியுறுத்துகின்றார் பொன்சேகா
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “விஜயதாஸ ராஜபக்ஷ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருகின்றார். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியைவிட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும். எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் […]
யுத்தம் முடிவடைந்தும் மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்: மகேஸ்வரன்
மட்டு.மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என ஜக்கிய தேசிய கட்சி மட்டு.அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார். ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் கல்லடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது […]
வடக்கு முதலமைச்சரை பதவி நீக்கப்படமாட்டார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சரை பதவி நீக்கப்படமாட்டார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது: சரத் பொன்சேகா
இறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் […]
பொன்சேகாவுக்கான புதிய பதவி குறித்து ஆர்வப்படும் இராஜதந்திரிகள்!
பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தில் சிறப்புச் செயலணியை உருவாக்கி அதிகாரங்களை ஒப்படைக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து உள்நாட்டு அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையைத் ஏற்படுத்தியிருந்தது. இதன் […]





