அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விஷேட நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின்மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ள ஒருவரும், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஒருவரும், இராணுவத்தினரை பாதுகாக்கும் ஒருவரும், நாட்டில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒருவரும், சுயநலமற்ற தூய்மையான அரசியலில் […]
Tag: கோட்டாபய ராஜபக்ஷ
சம்பந்தனை அழைக்கிறார் கோட்டா! – ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் பெருமெடுப்பில் கண்டியில்
புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உதயமாகியுள்ள ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தான் அழைப்பு விடுக்கவுள்ளார் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ‘எலிய – ஒளிமயமான அபிலாஷைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு அறிமுகம் செய்யும் நிகழ்வு பாதுகாப்பு […]
எதற்கும் அஞ்சாதீர்! – ஜகத்துக்கு ஆறுதல் கூறிய கோட்டா
“எதற்கும் அஞ்சவேண்டாம். போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடுக்கவேண்டிவரின் உங்களுடன் நான் இருப்பேன்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜகத் ஜயசூரியவுக்குச் சார்பாக பலரும் ஆதரவுக்குரல் எழுப்பிவருகின்றனர். அவர் மீது கைவைக்க இடமளிக்கமாட்டார் என […]
புதிய அரசமைப்புக்கு முடிவுகட்ட நேரில் களமிறங்குகிறார் கோட்டா! – பரப்புரைப் போரை முன்னெடுக்க 6இல் ‘வெளிச்சம்’ எனும் அமைப்பு உதயம்
புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீவிரம் காட்டிவரும் நிலையில், அந்த முயற்சியைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நேரடியாகக் களமிறங்கி பிரசாரப் போரை வழிநடத்தவுள்ளார். இதற்காக ‘எலிய’ (வெளிச்சம்) எனும் சிவில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ள அவர், எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் அதன் செயற்பாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார். அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் பொரலஸ்கமுவையில் நடைபெறவுள்ளதுடன், அதற்குத் தலைமை தாங்குமாறு தனது […]
ரோஹித ராஜபக்ஷவும் விசாரணைப் பொறிக்குள்! – ஆதரவளிக்கக் களமிறங்கினார் கோட்டா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு (எவ்.சி.ஐ.டி.) நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட் 1 செய்மதி விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி பற்றி வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எவ்.சி.ஐ.டி வளாகத்துக்குச் சென்றிருந்தார். முன்னாள் எம்.பிக்களான […]
கோட்டாவை கைதுசெய்து வீண் பாவம் தேடாதீர்கள்! – அரசிடம் கோருகிறது மஹிந்த தரப்பு
புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்த அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எதிரியாகத் திகழ்பவர் கோட்டாபய. அவர் புலிகளைத் தோற்கடித்தமைதான் இதற்குக் காரணம். இவரை […]
பொது எதிரணியின் இறுதி அஸ்திரமாகிறார் கோட்டா! – மக்கள் செல்வாக்கை நாடிபிடித்துப் பார்க்க உள்ளூராட்சி தேர்தல் ஆய்வுக் களமாகின்றது
இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சித்துவரும் மஹிந்த அணியான பொது எதிரணி, இதற்கான தமது இறுதி அரசியல் அஸ்திரமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே முழுமையாக நம்பியிருக்கின்றது எனத் தெரியவருகின்றது. இதன்படி மக்கள் மத்தியிலுள்ள அவருக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பரீட்சைக் களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை பொது எதிரணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பொது எதிரணி உறுப்பினர் ஒருவர், கோட்டாபயவையும், […]
2020இல் ஜனாதிபதியாக கோட்டா: அச்சமடைகின்றது தேசிய அரசு! – அதனாலேயே அவரைக் கைதுசெய்ய திட்டம் என்கிறார் மஹிந்தானந்த எம்.பி.
“2020ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அந்தச் செல்வாக்குக்குப் பயந்துதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை […]
மகஸின் சிறை, ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடுகளுக்கு கோட்டாவே காரணம்! – தண்டிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரி நிலையம் வலியுறுத்து
மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது. குற்றமிழைத்தவர்களைவிட குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இடதுசாரி நிலையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா மேலும் கூறியுள்ளதாவது:- “வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு […]
போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது : கோட்டா
நல்லிணக்கத்தை போர்க்குற்ற விசாரணைகள் ஒருபோதும் தோற்றுவிக்காது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளையும், விசாரணைகளையும் ஒரே நேரத்தில் கொண்ட வருவதன் மூலம் இலங்கை வாழ் சமூகங்களை இணைக்க முடிõது. அவ்வாறு செய்ய நினைத்தால், அனைவருக்குமான நல்லிணக்கமாக அது இருக்காது. போருக்குப் பின்னர், எம்மால் என்ன செய்ய முடியும்? பின்னால் […]





