அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய அவசியம் தற்போதைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது இப்போதும் உடனடியாக நடக்கும். அது தமிழ் மக்களுக்குப் படுபயங்கரமான ஒரு விளைவை ஏற்படுத்தும். […]
Tag: கூட்டமைப்பு
யாழ்ப்பாணத்தில் வைத்து கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் வரவு – செலவுத் திட்டம் ஆகியவற்றை எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது கூட்டமைப்பைத் தந்திரமாக ஏமாற்றி வருகின்றார் என்றும் அவர் சாடினார். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். […]
தம் சுயநலம் கருதியே கூட்டமைப்பும் செயற்படுகிறது: டக்ளஸ்!
அரசாங்கம் சுயநலம் கருதியே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான நிலையிலேயே செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சி, செல்வாநகர் மக்களுடன் நேற்று முந்தினம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன்போது குறித்த பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்தே செயற்படுவதாகவும், எந்தவொரு நாட்டிலும் […]
நாட்டை இரண்டாக்க சதி திட்டம் தீட்டும் கூட்டமைப்பு
கூட்டமைப்பால் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்ட மூலம் எந்த தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமையும். காரணம் அவர்களின் நோக்கம் நாட்டை இரண்டாக பிளவடையச் செய்வதாகும். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக இருந்து கொண்டு அவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் எதனையும் செய்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய அரசியலமைப்பிற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை […]
மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டது கூட்டமைப்பு !
புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தை தற்போது அது கைவிட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைமீது அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நாட்டில் நல்லிணக்கம் நிலவுவதற்கும் புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் […]
தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை ஒருபோதும் கூட்டமைப்பு ஆதரிக்காது!
“தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுகின்றேன். அரசியல் அமைப்பு முயற்சி வெற்றிபெற எமது ஆசிகள் என்றைக்கும் […]
கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணையே ஒரே வழி! – கூட்டமைப்பு திட்டவட்டம்
கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணையே ஒரே வழி! – கூட்டமைப்பு திட்டவட்டம் “கொலையாளிகளே விசாரணை நடத்தினால் எப்படி நீதி கிடைக்கும். எனவே, இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. நீதி, நியாயம் கிடைக்க வேண்டுமானால் சர்வதேச பங்களிப்புடனான விசாரணையே இடம்பெற வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இறுதிப்போரின்போது போராளிகள் […]
பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம்
பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி, தமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் […]





