Sunday , August 24 2025
Home / Tag Archives: கிழக்கில்

Tag Archives: கிழக்கில்

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன்

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் - சுமந்திரன்

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன் வடக்கு, கிழக்கு மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கில் விசேட பொருளாதார பொறிமுறை திட்டம் ஒன்றை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்க்கான எமது அழுத்தங்களும் நகர்வுகளும் தொடரும் அதேவேளை, …

Read More »

கிழக்கில் கால் பதித்த தமிழ் மக்கள் கூட்டணி!

வடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது. அவ்வகையில் கூட்டமைப்பின் கோட்டை என வர்ணிக்கப்படும் பட்டிருப்புத் தொகுதியிலே முதலாவது மக்கள் சந்திப்பு இன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சந்திப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் தொடருமென தமிழ் மக்கள் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

Read More »

வடக்கு ,கிழக்கில்; சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை

இந்திய மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகளை அடுத்து சுகாதார அமைச்சு இது பற்றி கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளைச் …

Read More »

வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி இரு சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் பெரு­ம­ள­வான சபை­களில் கணி­ச­மான உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. வடக்கில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் பெரும்­பான்­மை­யான சபை­களை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. யாழ். மாந­கர சபையில் 16 உறுப்­பி­னர்­களை பெற்று அதி­கூ­டிய ஆச­னங்­களை கைப்­பற்­றிய கட்­சி­யாக கூட்­ட­மைப்பு …

Read More »

வடக்கு, கிழக்கு வாழ் மலையகத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வேண்டும்!

வடக்கு – கிழக்கில் உள்ள மலையக மக்களுக்கு தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள மலையக மக்கள் …

Read More »

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து வடக்கு,கிழக்கில் இன்று பல்வேறு தரப்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச்சந்தி பசுமை பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த …

Read More »

இனவாதம் உருவாக இடமளிக்கமாட்டோம்: மங்கள சமரவீர

வடக்கு, கிழக்கில் எந்த வடிவத்திலும் அடிப்படைவாதம் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் உருவாகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. இதில் வடக்கு, தெற்கு என்ற பிரிவுகள் இல்லை. அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படும் இனவாதச் செயற்பாடுகள் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் …

Read More »

செம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா படையினரால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட சுமார் 600 பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுக்காலை செம்மணியில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் …

Read More »

முல்லைத்தீவில் 27 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கு அழைப்பு

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வழங்கியுள்ளது. நீலமீட்பு போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து, கடந்த 49 நாளாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் …

Read More »