Sunday , August 24 2025
Home / Tag Archives: கிளிநொச்சி (page 3)

Tag Archives: கிளிநொச்சி

ஜனநாயக போராட்டத்திற்கு மதிப்பளிக்காவிடின் தமிழினம் வேறு வழியை கையாளும்

மனிதாபிமான போராட்டம் தீர்வின்றி தொடருமாயின், அது எமது இனத்தவரை வேறு வழிக்கு திசைதிருப்புவதற்கே வழிவகுக்கும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 66ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவர், “இந்த ஜனநாயக …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அதில் இணையுமாறு அழைக்கின்றோம்.” – இவ்வாறு கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டடோர் உறவினர்கள் சங்கத் தலைவி கலாரஞ்சினி இது தொடர்பில் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி …

Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கை 2935 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில் சமீபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் தற்போதுள்ள நீர் அளவுகளின் பிரகாரம் இந்த ஆண்டின் சிறுபோகத்தில் 2935 ஏக்கர் மட்டுமே மேற்கொள்ள முடியும். சிறு போகம் மேற்கொள்ளக் கூடியதான …

Read More »

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம்

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் மக்களைச் சென்றடையாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை முதலமைச்சர் இன்றையதினம் நேரில் சென்று சந்தித்து …

Read More »

சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள்

பன்னங்கண்டி மக்கள்

சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள் மழைக்கும் வெயிலுக்கும் ஈடுகொடுக்க முடியாத தகரக் கொட்டில்களில் வாழும் தமது நிலை, அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையென கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உறுதியற்ற நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் பன்னங்கண்டி மக்கள், கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு …

Read More »

244 பேருக்கு கிளிநொச்சியில் பன்றிக் காய்ச்சல்

244 பேருக்கு கிளிநொச்சியில் பன்றிக் காய்ச்சல்

244 பேருக்கு கிளிநொச்சியில் பன்றிக் காய்ச்சல் கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர், புன்னைநீராவி, புலோப்பளை ஆகிய இடங்களில் இருந்து …

Read More »

காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம்

காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள்

காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம் குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி – பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பசுபதிப்பிள்ளை கிராமத்தின் முன்பாக பன்னங்கண்டி கிராம மக்கள் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த குறித்த போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது. பன்னங்கண்டி பகுதியில் 3 பிரிவுகளாக வசித்துவரும் மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, …

Read More »

பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு

பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, உறுதிப்படுத்தும் பட்சத்தில் உடனடியாகவே விடுவிக்கப்படும் என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் காணிகளை …

Read More »

திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம்

திகளின் வாக்குகள் பரவிப்பாஞ்சான் போராட்டம்

திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை நேற்றைய தினம் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக நேற்றுக் காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். …

Read More »

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம்

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல்

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம் கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்திடமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளது. பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்காக, கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி …

Read More »