இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக …
Read More »இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய அவர், ஈரான் போன்ற மனித உரிமைகளை மீறும் நாடுகளை ஒரு விதமாகவும், இஸ்ரேல் விடயத்தில் பாரபட்சமாகவும் ஐ.நா மனித …
Read More »ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை மனதார வரவேற்கின்றது கூட்டமைப்பு! – அரசு மந்தப் போக்கில் தொடர்வது மாபெரும் தவறு எனவும் சுட்டிக்காட்டு
இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்றுள்ளது. இனியும் விதண்டாவாதக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுத் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு …
Read More »மைத்திரியின் ‘போர்க்குற்ற’ அறிவிப்பால் மேற்குலக தூதுவர்கள் அதிருப்தி! கொழும்பில் கூடி அவசர ஆய்வு!! – ஜெனிவாத் தொடரிலும் ‘தலையிடி’யாக மாறும் அபாயம்
படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பால் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எனவே, இலங்கையின் சமகாலப்போக்கு, ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டும் ஆர்வம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் இவ்வாரம் கூடவுள்ளனர் எனப் பெயர்க் குறிப்பிட விரும்பாத மேற்குலகின் மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி …
Read More »ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தில் தான் நீதியும், குணப்படுத்தல் வசதிகளும் உள்ளன என்பது முக்கியமாகும். வேறு எதுவும் அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக் …
Read More »ஐ.நா. ஆணையாளருக்கு எதிராக முறைப்பாடு!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவர் Joaquin Alexander Maza Martelli இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படையதிகாரி சரத் வீரசேகர இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். குறித்த இருவரது அறிக்கைகளும் உண்மைக்கு புறம்பானவை எனவும், …
Read More »நாடாளுமன்றில் மஹிந்த அணியினரால் அமளிதுமளி; நாளை வரை ஒத்திவைப்பு
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினரது தொடர் இடையூறுகளால் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவாதத்தை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபையில் கொண்டுவந்தது. எனினும், விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் நேரப்பிரச்சினையை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டியதால் சபையில் அமளி ஏற்பட்டது. ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள 52 …
Read More »நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை
நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது நாளை புதன்கிழமை விவாதம் நடைபெறும்போது, அரச தரப்புக் குழுவுக்கு பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் இன்று ஜெனிவா நோக்கி புறப்பட உள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் …
Read More »சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் உறுப்பு நாடுகள் பிளவுபடும் : ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பு
சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் உறுப்பு நாடுகள் பிளவுபடும் : ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பு இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், இலங்கை மீதான விசாரணை பொறிமுறையிலிருந்து சர்வதேச நீதிபதிகள் நீக்கப்படின் அது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடையே பிளவை ஏற்படும் என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு …
Read More »கால அவகாசம் வழங்குமா ஐ.நா.? – அமைச்சர் மங்கள இன்று உரை
கால அவகாசம் வழங்குமா ஐ.நா.? – அமைச்சர் மங்கள இன்று உரை கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை ஐ.நா.விடம் இலங்கை இன்று கோரவுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் …
Read More »