சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே அவர், சிறிலங்காவுக்கு உதவ தொடர்ந்தும் உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்டார். சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முனையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் இந்தச் […]
Tag: ஐ.நா
கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் !!
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் இலங்கை அரசாங்கம் அதனை எந்தளவுக்கு சாத்தியமாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயங்களைக் […]
இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை
இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் எதிர்வரும் 20ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின், இலங்கை தொடர்பான அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க, […]
ஐ.நா. அமர்வுகள் ஆரம்பம்
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உரையுடன் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கியதாக அவரின் உரை அமைந்திருந்தது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதோடு, இலங்கை தொடர்பான விவாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித […]
ஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை
ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர […]
பிரித்தானிய பிரபுவின் தகவல்கள் பொய்யானவை
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரபு நசெபி தெரிவித்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஐ.நா.வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற அமர்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் வெறும் 8000 பேரே உயிரிழந்தனர் என பிரபு நசெபி கடந்த சில மாதங்களுக்கு முன்னர்; தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி, அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் சிங்கள பிரதிநிதியொருவர் நேற்று கேள்வி […]
கண்டி வன்முறையை கோழைத்தனமானது ரவிநாத் ஆரியசிங்க ஐ.நாவில் கண்டனம்
கண்டியில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையானது, ஜனநாயக மற்றும் பன்முக சமுதாயத்தில் இடமற்ற சிலரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான செயல் என ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் உரிமைகளும், […]
மனிய உரிமை மீறல் குற்றங்களுக்காக கொழும்பு மீது பன்னாட்டு விசாரணை!!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காக அதன் மீது உலக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையிலான (அதாவது பன்னாட்டு நீதி விசாரணை போன்ற ஒன்று) தெரிவுகள் உட்பட மாற்று வழிகளை உலக நாடுகள் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன். இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் கொழும்பு […]
காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐ.நாவில் குழப்பம்
வடக்கில் போரின் பின்னர் காணாமல்போன சிறுவர்களில் 611பேர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஐ.நாவில் இடம்பெறும் 77ஆவது அமர்வின் சிறுவர் உரிமை மாநாட்டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜெனிவாவில் இடம்பெறும் 77ஆவது ஐ.நா கூட்டத்தொடரின் சிறுவர் உரிமை மாநாடு ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்ந்த விடயம் […]
ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெறக்கோரும் ஐ.நா. தீர்மானம் வெற்றி
ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் […]





