Friday , November 22 2024
Home / Tag Archives: எம். ஏ. சுமந்திரன்

Tag Archives: எம். ஏ. சுமந்திரன்

குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை

குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை

குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் சட்டம் …

Read More »

இந்தியாவின் தலையீடு இல்லாமல் அரசியல் தீர்விற்கு சாத்தியமில்லை

இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட சந்தர்ப்பம் இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள இந்திய துணைதூதுவர் ஆ.நடராஜனின் சேவையை பாராட்டும் விதமாக யாழ். முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வொன்று யாழிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. வட மாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இ கலந்துகொண்டு …

Read More »

அதிகாரப் பகிர்வு மக்களுக்கே! – அரசியல்வாதிகளுக்கு அல்ல என வவுனியாவில் மைத்திரி தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)

“அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல. அது மக்களைப் பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்துகின்ற – துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக்கூடாது என்றும் கூறினார். வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் …

Read More »

ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை மனதார வரவேற்கின்றது கூட்டமைப்பு! – அரசு மந்தப் போக்கில் தொடர்வது மாபெரும் தவறு எனவும் சுட்டிக்காட்டு

இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்றுள்ளது. இனியும் விதண்டாவாதக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுத் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு …

Read More »

மைத்திரியின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி!

“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள படையினரைக் காப்பாற்றும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய இனத்தைக் காப்பாற்ற முற்படுகின்றார்; அழிக்கப்பட்ட  பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கின்றார்.”  – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி சர்வதேச சமூகத்தினருக்கு வழங்கிய அல்லது அவர்களுடன் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வது நல்லது” என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. …

Read More »

சமஷ்டிக்கு இதுதான் தருணம்! – சுமந்திரன் எம்.பி. விவரிப்பு

“தமிழர்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் கோருவதற்கும் – ஏன் சுயநிர்ணய உரிமையைக்கோருவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை உயர்நீதிமன்றத்திடமிருந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்தச் சமயத்தில்தான் நாட்டின் இரு பெரும் கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டு அரசை அமைத்திருக்கின்றன. எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் உரிமையுடன் கோரிப் பெற்றுக்கொள்வதற்கான சரியான தருணம் இதுதான்.” – இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் …

Read More »

உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்கு! – ஜகத் ஜயசூரிய விவகாரம் குறித்து சுமந்திரன் கருத்து

“பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் நீதி நியாயம் கிடைப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டதால்தான் நமது மக்கள் வெளிநாடுகளில் வழக்குப் போடும் நிலைமை வந்திருக்கின்றது.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னித் தளபதியாக இருந்தவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தற்போது பிரேஸில் மற்றும் அதைச் சூழ்ந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கை மீது அழுத்தம்! – அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது கூட்டமைப்பு

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை இவ்வாரம் இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தவுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

Read More »

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது …

Read More »

கூட்டமைப்பை நேரில் சந்திக்கப் பின்னடிக்கின்றார் மைத்திரி! – சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம் என்கிறார் சுமந்திரன்

கூட்டமைப்பை நேரில் சந்திக்கப் பின்னடிக்கின்றார் மைத்திரி! – சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம் என்கிறார் சுமந்திரன் “புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இதற்காக அவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கட்சி கேட்டுள்ளது. எனினும், இதுவரை சந்திப்புக்கு நேரம் வழங்கப்படவில்லை. ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நாம் ஏற்கனவே நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். …

Read More »