இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு …
Read More »குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்
100 வீதம் விடுதலை சாத்தியமில்லை என்று அரசியல் ஆய்வாளர்களால் கூறப்பட்ட குர்தீஸ் மக்கள் இன்று சுதந்திர விடுதலை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அது அவர்களின் மிகப்பெரிய முயற்சிகளின் வெற்றியாகும். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகால வரலாற்றுப்பாரம்பரியம் கொண்ட குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Log )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. …
Read More »ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த கடைசி நகரமும் மீட்பு
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த தல் அபர் என்ற கடைசி நகரமும் நேற்று ராணுவத்தால் மீட்கப்பட்டது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தன் நாடு ஆக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அதன் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த …
Read More »மொசூல் நகரில் மனைவி-குழந்தைகளை மனித கேடயமாக்கி உச்சக்கட்ட போரில் ஈடுபட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களது மனைவி, குழந்தைகளை மனித கேடயமாக்கி இராணுவத்துடன் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் ராணுவத்தின் கடும் தாக்குதலால் ஒவ்வொரு பகுதியாக இழந்து வந்தனர். கடைசியாக அவர்கள் வசம் மொசூல் நகரம் இருந்தது. அதை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் போர் தொடுத்தன. 9 மாத தீவிர …
Read More »ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேர் கொன்று குவிப்பு
ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து போலீஸ் படை மீட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரின் கிழக்கு பகுதியை ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மீட்டது. அதைத் தொடர்ந்து மேற்கு பகுதியையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தங்கள் வசப்படுத்துவதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. …
Read More »கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ! ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் அருகே கார் குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். குண்டு வெடிப்பால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மொசூல் நகரில் கட்டுப்பாட்டை …
Read More »தீவிரவாதிகளை சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம் – ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி
தீவிரவாதிகளை சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம் – ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி மொசூல் நகரில் இருந்து தப்பி ஓடும் ஐ.எஸ். தீவிரவாதிகளை சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம் என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி கூறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி வைத்து இருந்தனர். இதில், ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த பல பகுதிகளை ஈராக் படைகள் மீட்டு விட்டன. கடைசியாக …
Read More »ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. …
Read More »