ராமேஸ்வரத்தினை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தினால் மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Tag: இலங்கை கடற்படை
இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். இந்தநிலையில், […]
ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொல்லப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்
ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொல்லப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே பார்க்க முடியுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டார். ஈழத் தமிழ் […]
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். சிங்களப்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ராமநாதபுரம் […]





