Tag: இலங்கை

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் ; கனடா வலியுறுத்து

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் வன்முறைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கனடா, இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இனங்களுக்கிடையிலான அமைதியின்மை காரணமாக இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃரீலண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். முஸ்லிம் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் இனங்களுக்கிடையிலான வன்முறை குறித்து கனடா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுகளின் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட […]

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் அரச படைகள் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும் அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும்இ தமிழ்இ முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போதுஇ சிரியாவின் கிழக்கு ஹௌட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும்இ அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட […]

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய அவர், ஈரான் போன்ற மனித உரிமைகளை மீறும் நாடுகளை ஒரு விதமாகவும், இஸ்ரேல் விடயத்தில் பாரபட்சமாகவும் ஐ.நா மனித […]

இந்தியா வரும் ராஜபக்சேவை வரவேற்கும் சந்திரபாபு நாயுடு

இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு கொடுக்கவுள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அதிபர் சிறிசேனாவின் ஆட்சியே ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. வெகுவிரைவில் இலங்கையில் […]

நிலைப்பாட்டை வெளியிட்டது த.தே.கூ.

ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் […]

பெண்களும் மதுபானம் வாங்கலாம், விற்கலாம்

இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவது மற்றும் விற்பதற்கு இருந்த தடை 38 வருடத்திற்கு பின் நீக்கப்பட்டு உள்ளது இலங்கை கடந்த 1979ம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டு வந்தது. அதில் இருந்து பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நடைமுறையில் இருந்த நிலையிலும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது. […]

காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சந்­தித்­தார் ஹரி ஆனந்த சங்­கரி

கனே­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உ.ஹரி ஆனந்த சங்­கரி முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு பய­ணம் மேற்­கொண்டு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளை­யும், கேப்­பா­பு­ல­வில் போராட்­டம் நடத்­தும் மக்­க­ளை­யும் விடு­விக்­கப்­பட்ட இடங்­க­ளை­யும் பார்­வை­யிட்­டுள்­ளார். முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­துக்கு முன் காணா­மல்­போ­னோர்­கள் நடத்­தி­வ­ரும் போராட்ட கொட்­ட­கைக்கு நேற்று­க் காலை சென்ற அவர் அங்கு காண­மல் போன­வர்­க­ளின் உற­வி­னர்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார். இதன்­போது, ‘முந்நூறு நாள்­க­ளுக்கு மேலாக போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரும் காணா­மற் போன­வர்­க­ளின் விட­யத்­தில் இங்­குள்ள அர­சி­யல்­த­லை­வர்­களையோ அரச […]

இந்தியா, இந்தோனேசியாவிற்கு சுனாமி ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!

சனிப்பெயர்ச்சி காரணமாக கடலுக்கு அடியில் உள்ள பூமி விலகுவதால் இந்தியா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் கடல் கொந்தளிக்கும் எனவும் சுனாமி வரும் எனவும், இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும் எனவும் பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார். சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19-ஆம் தேதி செவ்வாய் கிழமை விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சன பகவான் இடம் பெயர்கிறார். நீர் ராசியில் இருந்து நெருப்பு […]

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

சிறு­வர் துஷ்­பி­ர­யோ­கம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அறி­வித்­துள்­ளது. இதற்கிணங்க சிறு­வர்­களின் கட்­டாய கல்­வியை தடுத்தல் தொடர்­பாக 1298 முறைப்­பா­டு­களும் பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக 481 முறைப்­பா­டு­களும், தீவிர பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 284 முறைப்­பா­டு­களும், 14 வய­துக்­குட்­பட்ட பெண் பிள்­ளைகள் மீதான வன்­பு­ணர்வு தொடர்­பாக 322 முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்­டளை சட்­டத்தின் […]

மாலைதீவில் இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் மீனவப் படகுகள் இரண்டையும் அதில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பத்து மீனவர்களையும் மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோரப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். மாலைதீவின் கடல் எல்லைக்கு உட்பட்ட வாவு அட்டோல் பகுதியில் இவ்விரண்டு படகுகளும் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. இதை, மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோர ரோந்துப் படகு ஒன்று அவதானித்தது. இது பற்றிய தகவல்களை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறியத் தந்த பின்னரே இரண்டு படகுகளையும் கைப்பற்றியதுடன், அதில் […]