உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. தேசிய அரசு ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான […]
Tag: இலங்கை
ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் […]
ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி
இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள ஹொரானா நகரில் இருக்கும் ரப்பர் தொழற்சாலையில் பணியாளர் ஒருவர் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு அவரை தாக்கியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை அந்த தொட்டியில் இருந்து மீட்க உள்ளே […]
ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கான பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. போர் ஓய்வுக்குக்கு பின்னர் தற்போதைய விடுதலைப்புலிகளதும் அதன் போராளிகளது அரசியல் பொருளாதாரசெயற்பாடுகள் தொடர்பிலும். தாயகஅரசியல் பரப்பில் போராளிகளது பங்குபற்றுதலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. போரில் நேரடியாக பங்குபற்றியவர்கள் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட முடியுமானால் அதே போன்று போர்சூழலில் பலதரப்பட்ட காரணங்களுக்காகவும் காரணமின்றியும் நெடுநாட்கள் சிறையில் வாடும் அரசியல்கைதிகள் எவ்விதமானதொரு […]
இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவு!
பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான இலங்கையின் முயற்சிக்கு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இலங்கையும், பாகிஸ்தானும் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்களால் […]
இலங்கை குறித்த அறிக்கை ஐ.நா.-வில் நிறைவேற்றம்!
இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக […]
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் பலமான நட்புறவாக மாறியுள்ளது – ஜப்பான் பிரதமர்
சென் பிரன்ஸிஸ்கோ மாநாட்டில் பலப்படுத்தப்பட்ட ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதுடன், அது நம்பிக்கையும் பலமும் மிக்க நட்புறவாக மாறியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார். ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவினால் நேற்றுமுன்தினம் விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. டோக்கியோ நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் […]
இலங்கையில் பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது
இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும்இ ஜனாதிபதி செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெற்றது. இதன்போது இனவிரோத பதவிகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேஸ்புக் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். இதன்படி இந்த தடையை நீக்குவதற்கு தாம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் […]
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த, பஸிலுடன் பேசவில்லை
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பஸில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம்வரும் போது, மஹிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார். ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு […]
பொலிஸார்மீது சரமாரியாக விமர்சனம் : விசாரணை வேட்டையில் பொலிஸ் ஆணைக்குழு!
அம்பாறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது பொலிஸார் செயற்பட்டவிதம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. வன்முறைகள் வெடித்த பகுதிகளுக்கு இவ்வாரம் நேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளனர். அம்பாறை மற்றும் கண்டி வன்முறைகளின்போது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் தவறிவிட்டனர் என்றும், பக்கச்சார்பான முறையிலேயே அவர்கள் […]





