“புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை. அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலில் பேசவேண்டும். அதன்பின்னரே சம்பந்தனுக்கு உரிய பதிலை வழங்கமுடியும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் …
Read More »புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும் மஹிந்த! – சம்பந்தன் நேரில் வலியுறுத்து
“புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டியது மஹிந்த ராஜபக்ஷவின் கடமையாகும். இதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன்” என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்படி கருத்தை வெளியிட்டார். …
Read More »மஹிந்த – சம்பந்தன் மந்திராலோசனை! – புதிய அரசமைப்புக் குறித்து விரிவான கருத்துப் பகிர்வு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சத்தம் சந்தடியின்றி சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. தனித்து இருவரும் சுமார் 45 நிமிட நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கின்றனர். புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர்கள் மந்திராலோசனை நடத்தியிருக்கின்றனர் எனத் தெரியவந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரது கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தில் …
Read More »நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை அரசுக்கு அழுத்தம் தொடரும்! – இலங்கைத் தமிழரை இந்தியா கைவிடாது என சம்பந்தனிடம் சுஷ்மா உறுதி
“இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும். எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ். “இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது” எனவும் வாக்குறுதியளித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் …
Read More »’20’ குறித்து சம்பந்தன் – ஹாபீஸ் மந்திராலோசனை!
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் நேற்றுமுன்தினம் மந்திராலோசனை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டது. இந்நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் …
Read More »காலத்தை இழுத்தடிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – மைத்திரியிடம் நேரில் சம்பந்தன் இடித்துரைப்ப
“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, காலத்தை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் இடித்துரைத்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற முக்கிய …
Read More »தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – சம்பந்தன் குழு இன்று முக்கிய பேச்சு!
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
Read More »ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று முக்கிய சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான முக்கிய சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார். புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கூட்டமைப்பு …
Read More »சம்பந்தனுடன் கைகோக்க மஹிந்த தரப்பினர் ஆர்வம்! – நாமல் ஊடாக சமிக்ஞை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நெருங்கிய அரசியல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதன் ஒரு வெளிப்பாடாக சம்பந்தனின் கருத்தை வரவேற்கும் டுவிட்டர் செய்தி ஒன்று மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் எம்.பியினால் தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் …
Read More »பொறுமை இழந்துவிட்டனர் தமிழர்! தலையிட வேண்டும் சர்வதேச சமூகம்!! – சம்பந்தன் அவசர கடிதம்
“தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்துக்கு சாதகமான சமிக்ஞை அல்ல. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக்கொண்டிராமல் தலையீடு செய்யவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. பொதுச் செயலர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு அவசரமாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை …
Read More »