Sunday , December 22 2024
Home / Tag Archives: இரா. சம்பந்தன்

Tag Archives: இரா. சம்பந்தன்

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன்

இரா.சம்பந்தன்

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, கோத்­தபாய ராஜ­பக்ச அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறி­வித்­துள்ளார். வேட்பு மனுத்­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான …

Read More »

சம்பந்தன் பதவி விலக வேண்டும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் …

Read More »

எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் வைத்து நேற்று எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் சுகயீனமுற்றதாகவும் அதன் பின்னர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை ஒருபோதும் கூட்டமைப்பு ஆதரிக்காது!

“தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுகின்றேன். அரசியல் அமைப்பு முயற்சி வெற்றிபெற எமது ஆசிகள் என்றைக்கும் …

Read More »

புதிய அரசமைப்பு தொடர்பில் சம்பந்தன் – தினேஷ் சந்திப்பு! – விரைவில் கூட்டுப் பேச்சுக்கும் ஏற்பாடு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது. பொது எதிரணியின் அழைப்பின்பேரில் இந்தப் பேச்சு கொழும்பில் நடைபெறவுள்ளது எனவும், இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படும் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்தப் பேச்சுக்கான அழைப்பை விடுத்துள்ளார் …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு? – பிரிட்டன் தூதுவருடன் சம்பந்தன் பேச்சு 

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் …

Read More »

சர்வஜன வாக்கெடுப்புக்கு சம்பந்தன் பச்சைக்கொடி!

“புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசிடமும் தெளிவுபடுத்தியுள்ளோம்.” –  இவ்வாறு தெரிவித்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். “புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் காலம், பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் என்பன குறித்து எங்களுக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது. அவை உரிய முறைப்படி நடக்குமென எதிர்பார்க்கிறோம். ஆனாலும், சர்வஜன …

Read More »

இறுதிப் போரில் நடந்தது என்ன? நீதிமன்றில் ஆஜராகி உண்மையை அம்பலமாக்குக! – பொன்சேகாவிடம் சம்பந்தன் கோரிக்கை

“இறுதிப் போரில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனவே, சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் ஆஜராகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை  சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

Read More »

உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு! – அதற்கே முயல்கிறோம் என்கிறார் சம்பந்தன் 

“எமது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காகவே நாங்கள் கடுமையாக முயன்று வருகின்றோம். எங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் …

Read More »

புதிய அரசமைப்பு நிறைவேறுவதை உறுதிப்படுத்த வேண்டும் இந்தியா! – சுஷ்மாவை மீண்டும் சந்தித்து வலியுறுத்தினார் சம்பந்தன் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இரண்டாவது தடவையாக நேற்றும் சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு …

Read More »