Tag: ஆர்.கே.நகர்

எங்களை கட்சியில் நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன், முத்தையா, வி.பி.கலைராஜன், ஆகியோரை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன் அகியோர் மாவட்ட செயலாளர்கள் பதிவியில் இருந்து நீக்கப்பட்டனர். முத்தையா, […]

இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்தே பெரும் ஆதரவு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனிடம் இருந்து பிரிந்து சென்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லக்கூடும் பலர் தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி […]

ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி…">

ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி…

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40, 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28,234 வேட்பாளர்களில் 1,76,885 பேர் வாக்களித்தனர். அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது. அதன் வாக்கு எண்ணிக்கை சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் […]

தேசத்தை ஆளும் கட்சிக்கு நோடாவுடன் தேர்தல் போட்டி: சு.சுவாமி நக்கல் ட்விட்!!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. தற்போது வரை 4 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் மின்னிலையில் உள்ளார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெருவார். 2019 […]

கடும் கோபத்தில் சசிகலா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதால், தினகரன் மீது சசிகலா கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். 20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக […]

தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் […]

ஆர்.கே.நகரில் யாருக்கு வெற்றி?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்காக இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து மத்திய அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகருக்கான தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் மற்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரிடையே பலத்த […]

தினகரனின் குக்கர் பழைய இரும்புக்கடைக்குத்தன் போகும்:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் டிடிவி தினகரன், தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டவுடனே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் மேலும் எதிரிகளுக்கு பிரஷரை வரவழைக்கவே பிரஷர் குக்கர் சின்னம் பெற்றதாக கூறினார். அவர் கையில் குக்கரை வைத்துக்கொண்டே பிரச்சாரம் செய்வத் அத்தொகுதி மக்களை கவர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]

ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையும் அதேபோன்று நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் […]

ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 7 வார்டுகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் […]