அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சியின் உள்ளகத் தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த தோல்வியின் பின்னர் கொழும்பு அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அரசியல் பதற்ற நிலையைத் தனிக்க அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதாக தேசிய அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. எனினும் முதலாம் கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. …
Read More »அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?
தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவரின் குற்றச்சாட்டுகள் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியிருந்தது. ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ஈபிஆர்எல்எவ், புளொட், …
Read More »அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை – ராஜித சேனாரத்ன
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் கடந்த சில நாட்களாக செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்தநிலையிலேயே, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதையும் பேசவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை அமைச்சரவை மாற்றம் கூடிய விரைவில் இடம்பெற வாய்ப்பில்லை என்று …
Read More »