Sunday , August 24 2025
Home / Tag Archives: அமெரிக்கா (page 6)

Tag Archives: அமெரிக்கா

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் முதலிடம்: சீனா சர்டிபிகேட்

தீவிரவாதிகளை வளர்த்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக சீனா வக்காலத்து வாங்கியுள்ளது. தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கைகள் குறித்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ‘பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் …

Read More »

அமெரிக்கா, தென்கொரியா இன்று கூட்டு போர் பயிற்சி: வடகொரியா எச்சரிக்கை

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இன்று நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் …

Read More »

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை விசாரணைக்கு சீனா அதிருப்தி

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் அமெரிக்கா நடத்திவரும் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் தொடர்பான விசாரணைக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் பயனற்றுப் …

Read More »

கொரிய தீபகற்பத்தில் போர் கிடையாது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டம்

கொரிய தீபகற்பத்தில் போருக்கு இடம் இல்லை என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டமாக கூறினார். வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் புதிய பொருளாதார தடை ஒன்றை விதித்தது. இதற்கு அமெரிக்கா தான் வழிவகுத்தது. இதன்படி வடகொரியா நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாக, வடகொரிய நாட்டுக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி …

Read More »

பிரச்சினைகள் தீர இந்தியா-சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

‘பிரச்சினைகள் தீர இந்தியாவும், சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனராணுவம் ரோடுபோட முயன்றது. அதை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதை தொடர்ந்து இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 50 நாட்களாக பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் லடாக் பகுதியில் புகழ் பெற்ற …

Read More »

சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா நடத்திவரும் ’டூப்ளிகேட்’ மற்றும் ’கோல்மால்’ வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் …

Read More »

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் உயிரிழந்தனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் சமீப காலமாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அபு சயீத், கடந்த மாதம் குணார் மாகாணத்தில் நடந்த வான்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அந்த இயக்கத்தின் …

Read More »

இலக்கை குறிவைத்து விட்டோம் – வட கொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார்

சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. …

Read More »

அமெரிக்கா மீது தாக்குதல்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவின் குயாம் தீவு மீது ஏவுகனை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நியுஜெர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் என்ற இடத்தில் தனது விடுமுறையை குடும்பத்துடன் கழித்து வருகிறார். இந்த நிலையில் வடகொரியா மிரட்டல் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வடகொரியாவின் மிரட்டலை எப்படி கையால்வது குறித்து அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. …

Read More »

டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரமாக மான்ஹட்டனில் உள்ள வானுயர்ந்த கட்டிடங்களை குறிக்கும் விதமாக கடந்த 2005 ஆம் ஆண்டில் தொண்டு …

Read More »