ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தடுத்த தேர்தல் அதிகாரியை அந்த அதிமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆர்கே நகருக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் […]
Tag: அதிமுக
ஆர்.கே.நகரில் 500 குக்கர்கள் பறிமுதல்
ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் வேன் ஒன்றில் இருந்து 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தினகரன் பெரிதும் எதிர்பார்த்த தொப்பி சின்னம் அவருக்கு கிடைக்காமல் போனது. அதற்கு பதில் தேர்தல் ஆணையம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது. தேர்தல் நடத்தை […]
ஆர்.கே.நகரில் ராப் ஸ்டைலில் தெறிக்கவிடும் அதிமுக தீம் சாங்
ஆர்.கே.நகரில் பிரசாத்துக்கு பயன்படுத்துவதற்காக அதிமுக சார்பில் தீம் சாங் ஒன்று உருவாக்கப்பட்டு ஒலிக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஆதரவு யாருக்கும் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளும் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பிரசாரங்களில் பாடல்கள் ஒலிக்கப்படுவது […]
அதிமுக, திமுகவிற்கு கமல்ஹாசன் சவாலாக இருப்பார்
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் அவர் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பது ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு பொதுமக்கள் பதில் அளித்தனர். அதில், கமல், ரஜினி, விஜய் மற்றும் மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கும் பட்சத்தில், இதில், அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் நடிகர் […]
முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி
விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது தீபா குற்றச்சாட்டு .
என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று தீபா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் போதிய பாதுகாப்பு இல்லை. தனியாக வருமாறு தீபக் அழைத்தார் தனியாக வர மாட்டேன் என்று மறுத்தேன். தீபக் அழைத்ததாலேயே போயஸ் தோட்ட இல்லம் சென்றேன். வேதா இல்லம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதுபோல […]
சின்னத்தால் சின்னாபின்னமான இரு பிரிவுகள் …மாற்றி மாற்றி மரண கலாய்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் அல்லது திமுகவுக்கும் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் கூட இவ்வளவு போட்டி இல்லை, ஆனால் அதிமுக அம்மா கட்சிக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் நடுவே பெரும் ரகளை ஓடிக் கொண்டுள்ளது. ஜெயிக்கிறோமோ இல்லையோ முடிந்த அளவுக்கு ஒரு தரப்பை இன்னொரு தரப்பு அசிங்கப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் தரப்பு […]
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம்
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் மூன்றாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக […]
ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம், 114 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிட ‘அ.தி.மு.க., அம்மா’ சார்பில் சசி அக்காள் மகன் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருத கணேஷ், பா.ஜ., சார்பில் […]
சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் புதிய சின்னங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சசிகலா தரப்புக்குத் தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக சசிகலா தரப்புக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இது வேண்டாம் என சசிகலா அணி தெரிவித்தால் தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியின் […]





