வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார். கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் வித்தியா படுகொலைசெய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். […]
Tag: வித்தியா
வித்தியா வழக்கில் தலைமறைவான ஸ்ரீகஜன் விரைவில் கைது: பொலிஸ்மா அதிபர்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்.பொலிஸ் தலைமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்டுள்ளதுடன், அவருடன் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் தொடா்புபட்டுள்ளார். […]





