யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பல பகுதிகளில் அடுத்து அடுத்து இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் […]
Tag: யாழ்ப்பாணம்
மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை
நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகாமை மற்றும் செம்மணி இந்து மயானத்துக்கு அண்மையில் என இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதால் பொலிஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியிடன் […]
அதிகரித்த வெப்பத்தால் பற்றி எரிந்த வயல்!!
யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சூடு அடிப்பட்டு வயல்களில் போடப்பட்ட வைக்கோல்களில் தீ பற்றியது. அது அங்குள்ள வயல்களில் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. தீ வீடுகளுக்குள் பரவாதிருக்க ஈரமான சாக்குகளைப் போட்டு தடுக்கப்பட்டது என்று மக்கள் தெரிவித்தனர்.
இணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்
யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை சென்றடைந்து, உடுவில் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றினை கையளித்தலுடன் நிறைவு பெற்றது. இதன்போது அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது, இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் […]
யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்
யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை […]
சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் அரச படைகள் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும் அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும்இ தமிழ்இ முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போதுஇ சிரியாவின் கிழக்கு ஹௌட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும்இ அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட […]
யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்
யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
ஆசனப் பங்கீட்டு விவரம்!!
யாழ்ப்பாணம்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாநகர சபை சாவகச்சேரி நகர சபை பருதித்துறை நகர சபை சாவகச்சேரி பிரதேச சபை பருதித்துறை பிரதேச சபை வலி.வடக்குப் பிரதேச சபை ரெலோ- வல்வெட்டித்துறை நகர சபை ஊர்காவற்துறை பிரதேச சபை காரைநகர் பிரதேச சபை நெடுந்தீவு பிரதேச சபை கலப்பு ஆட்சி (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ரெலோ) நல்லூர் பிரதேச சபை வேலணை பிரதேச சபை […]
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில்
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட […]





