Tag: போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், இன்று 900 நாள்களை எட்டியுள்ளமையை முன்னிட்டு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கண்டிவீதி வழியாக ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து, அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தைச் சென்றடைந்தனர். ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை […]

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் சந்திப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை […]