Tag: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகிறது. பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக […]

பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேசவில்லை: பிரதமர்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான பாலமொன்றை அமைப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைய இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வது […]

நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் – பிரதமர்

போட்டித்தன்மை வாய்ந்த, வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய ஏற்றுமதி மூலோபாய அபிவிருத்தி மாநாட்டில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வெளிநாட்டுக் கடனும், நிலுவைத் தொகையும் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களாகும். நாட்டுக்கு போதுமான அன்னிய செலாவணி கிடைப்பதில்லை. ஏற்றுமதி சுற்றுலா மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு என்பனவற்றின் மூலமே கூடுதலான அன்னிய […]

நிலையான அபிவிருத்தி பேரவை - பிரதமர்

நிலையான அபிவிருத்தி பேரவையை அமைக்க நடவடிக்கை – பிரதமர்

நிலையான அபிவிருத்தி பேரவையை அமைக்க நடவடிக்ககை – பிரதமர் நிலையான அபிவிருத்தி பேரவையை அமைப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை தயாரித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பான வேலைத்திட்டங்கள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செயலமர்வு பாராளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டார். கனடாவின் சட்ட இதன் போது கவனத்தில் கொள்ளப்படவிருக்கிறது. இந்த இலக்குகளை […]

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர்

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதே வேளை நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் காலியில் நெலும் ஹப்பிட்டிய ரிதிதரு இளைஞர்களினால் […]

இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை - பிரதமர் ரணில்

இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை செயற்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்காது: பிரதமர் ரணில்

இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை செயற்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்காது: பிரதமர் ரணில் இலங்கை போன்ற சுதந்திரமான நீதித் துறை உள்ள நாட்டில் கலப்பு நீதிமன்றம் சாத்தியமற்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றி பிரதமர், இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளில் கலப்பு நீதிப் பொறிமுறையை உள்வாங்க வேண்டுமாயின் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலமே சாத்தியமாகும். […]

மனித உரிமை கரிசனைகள் அலோக் சர்மா

மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா

மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா ஸ்ரீலங்காவின் வட மேற்கு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. மத ரீதியில் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களையும் பிரித்தானிய கண்டிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக கனிஷ்ட இராஜாங்க அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார். செயற்பாட்டு சுதந்திரம், நம்பிக்கை […]

தமிழ் மக்களுக்குள் கோவிந்தன் கருணாகரம்

தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம்

தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றாரா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது […]

இராணுவக் கப்பல்களுக்கு - பிரதமர் ரணில்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல் இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஸ்ரீலங்கா தயாரென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய […]

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம்-ரணில் விக்ரமசிங்க

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த சாசனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த ஏழாம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம், சட்டமாக ஆக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு […]