தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலருக்கு மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட வன்முறை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ‘போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க […]
Tag: பலி
உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்
பாகிஸ்தானில் பாலம் மீது செல்பி எடுத்த போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் […]
ரயில் மீது ஏறி போராட்டம் : அதிர்ச்சி வீடியோ
பாமக சார்பாக இன்று திண்டிவனம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் அதிமுக, பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் போராட்ட களமாக மாறியுள்ளது. சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அண்ணாசாலையில் […]
தொடரும் சிரியா தாக்குதல்
சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். […]
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக கூட்டத்தில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட `சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு`, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய […]
கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி
சிரியாவில் நடந்த திடீர் கார் வெடிகுண்டு தாக்குதலில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர். குவாமிஷ்லி நகரில் கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். குர்தீஷ் தீவிரவாத அமைப்பினர் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேஹ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர். […]
தைய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலி
தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் குடியிருப்புகள் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர் மேலும் 114 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தைவானில் லேசான நில நடுக்கம் உணரப்பட்ட நிலையில், தற்பொழுது 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். […]
புதிய காரில் பயணம் செய்த தந்தை மகன் பரிதாப பலி
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவரது மகன் பிரவீன் அருண் பிரசாத் (30), சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கார் வாங்க நினைத்த பிரவீன் நெல்லைக்கு சென்று புதிய காரை வாங்கிவிட்டு, தனது தந்தையுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார். கடையநல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் விருதுநகர்-மதுரை சாலையில் பட்டம்புத்தூர் விலக்கு […]
பாலம் இடிந்து விழுந்ததில் 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி
கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்க மாகாணம் கொலம்பியாவில் சிரஜாரா என்ற இடத்தில் தலைநகர் பகோட்டாவையும், வில்லாவிசென்சியோ நகரையும் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பாலம் இடிந்து விழுந்தது […]
அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக பலி
அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் கெய்ட்லின் நெல்சன் (20) என்பவர் படித்து வந்தார். அந்த் அக்ல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது, அதில் கெய்ட்லின் கலந்துகொண்டார். போட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உணவு ஒவ்வாமையால் […]





