தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசபிள்ளை கார்த்திகா எனும் 16 வயது சிறுமியின் சடலமே நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் மூதூர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு […]
Tag: திருகோணமலை
திருகோணமலையில் இளஞ்செழியன் விடுத்த முதல் அதிரடி தீர்ப்பு!
திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த பிக்குகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இரண்டு பௌத்த பிக்குகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கிற்காக நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகள் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வரும் தருணத்தில் குற்றவாளிக் கூண்டியில் ஏறியுள்ளனர். எனினும் அவ்விருவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் […]
ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கான பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. போர் ஓய்வுக்குக்கு பின்னர் தற்போதைய விடுதலைப்புலிகளதும் அதன் போராளிகளது அரசியல் பொருளாதாரசெயற்பாடுகள் தொடர்பிலும். தாயகஅரசியல் பரப்பில் போராளிகளது பங்குபற்றுதலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. போரில் நேரடியாக பங்குபற்றியவர்கள் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட முடியுமானால் அதே போன்று போர்சூழலில் பலதரப்பட்ட காரணங்களுக்காகவும் காரணமின்றியும் நெடுநாட்கள் சிறையில் வாடும் அரசியல்கைதிகள் எவ்விதமானதொரு […]
கிழக்கு பல்கலை. மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
கிழக்கு பல்கலைக்கழத்தின் மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகம் தவிர்ந்த மற்றய அனைத்து வளாகங்களும் மூடப்படவுள்ளதாகவும், இன்று 12 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிழக்கு பல்கலைக்கழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் […]
இனங்காணாத நோய்த்தொற்றினால் திருகோணமலையில் மூவர் பலி
இனங்காணப்படாத நோய் தொற்று காரணமாக திருகோணமலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் இன்புளுவென்சா எச்1 என்1 எனும் நோய்த்தொற்றினால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – சிறிமாபுற பகுதியில் வசித்து வந்த எச்.ஹேவாவித்தாறன எனும் 58 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12 ஆம்திகதி காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக குறித்த நபர் அருகிலிருந்த தனியார் மருத்துவ நிலையங்களில் […]
திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் நன்கொடை
திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1தசம் 3 பில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது. திருகோணமலை துறைமுகத்தையும், துறைமுகத்தின் கடல்சார் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கும், துறைமுகத்தின் வழிகாட்டல் முறையை அபிவிருத்தி செய்வதற்குமான ஜப்பானிய உற்பத்திகளை இந்த கொடையின் மூலம் பெற முடியும். இக்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்துடன் […]
திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு
திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு திருகோணமலையில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், குறித்த பிரதேசத்தில் நான்கு வைத்திய நிபுணர்களை உள்ளிடக்கிய 23 பேர் கொண்ட விசேட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். […]
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில்
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட […]
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.





