தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதவைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணம் அல்லவென்றும் அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர் என […]
Tag: தமிழ் மக்களின்
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது
“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்
தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு […]
தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துரைப்பேன்- சம்பந்தன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “ இந்தியப் பிரதமருடன் நடக்கவுள்ள சந்திப்புத் […]





