ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஆர்.கே.நகரில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா அணியின் டிடிவி […]
Tag: சென்னை
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல்
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமசீதா. இவர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்வதாகவும், ஜெயலலிதா இறந்த நிலையில் தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் பேசினார். மேலும், இந்த உண்மையை மறைத்ததால், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறினார். இவரது […]
பிரணாப் முகர்ஜி தாம்பரம் விமானப்படை தள விழாவில் பங்கேற்பு
பிரணாப் முகர்ஜி தாம்பரம் விமானப்படை தள விழாவில் பங்கேற்பு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகியோர் குடியரசு தலைவரை வரவேற்றனர். இதை தொடர்ந்து இன்று காலை துவங்கிய தாம்பரம் விமானப்படை தள விழாவில் பிரணாப் […]
ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்னை வருகை
ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்னை வருகை ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் ராணுவ விருது வழங்கும் விழா வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் […]
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது உறுதியாகவில்லை
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது உறுதியாகவில்லை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவது உறுதியாகவில்லை என மும்பை கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கவர்னரின் தமிழக பயணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், அவர் இப்போது வரை டில்லியில் தான் இருக்கிறார் எனவும் மும்பை கவர்னர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. […]
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல்
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் […]
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் சென்னை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் !
வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் ! மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடளுமன்ற கூட்ட தொடரில் அதிமுக செயல்பாடு குறித்து அக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்களுடன், பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து […]





