தற்போதைய அவசர நிலையை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை நாளை மறுதினம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சபாநாயகர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
Tag: சபாநாயகர்
முக்கியஸ்தரின் கட்டுப்பாட்டில் செயல்படும் சபாநாயகர்? அம்பலமான ரகசியம்
சபாநாயகர் கருஜயசூரிய, சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஆணை பற்றி பேசும் சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தும் சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு 54 […]
சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
நாடாளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். இதேவேளை, மறைக்கல்வியினூடாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன்நடத்தைகளை போன்று நாட்டின் மீயுயர் நிறுவனமாகிய நாடாளுமன்றினூடாகவும் நன்நடத்தைக்களை சிறுவர்கள் கற்றுக்கொள்ள கூடிய சூழல் விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற […]
மக்களிடம் தவறான தகவலை வழங்கும் சபாநாயகர்!
“தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக் கொண்டு சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குகிறார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல,“சபாநாயகர் தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கிறார். இக் காலங்களில் பாராளுமன்றில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனினும் அவர் அரச ஊடக […]
சபாநாயகர் – மஹிந்த எதிர்பாராத சந்திப்பு
சபாநாயகர் கரு ஜயசூரியவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று நேரில் எதிர்பாராமல் சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் தந்தையாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, பொரளை தனியார் மலர்ச்சாலையில் சபாநாயகரை எதேச்சையாக சந்தித்தார். இதன்போது சபாநாயருக்கு அருகில் அமர்ந்திருந்து சில நிமிடங்கள் மஹிந்த அளவளாவியுள்ளார். எனினும், பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை.
அதிரடி சவால் விடுத்த சபாநாயகர்!
சபாநாயகர் கரு ஜயசூரிய, மஹிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார். சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு கூடுதல் ஆசனங்களைத் தர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விடுத்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 5 ஆசனங்கள் வீதம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐக்கிய மக்கள் […]
சபாநாயகர் பதவி விலக வேண்டும்! ஆளும்கட்சியின் எதிர்ப்பு
சபாநாயகரின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்படாவிடில் சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற எந்த செயற்பாடும் சட்டரீதியாக இடம்பெறவில்லை. இந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் சபாநாயகர் தாமாகவே பதவி விலக வேண்டும் […]
மைத்திரிக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தநிலையில் சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு […]
கீதா குமாரசிங்க விவகாரம்: தீர்ப்பு கைக்கு கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை! – சபாநாயகர் தெரிவிப்பு
“கீதா குமாரசிங்க எம்.பி. தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சம்பந்தமாக எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் என்பன நிறைவடைந்ததை அடுத்து, வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரம் ஆரம்பமானது. […]
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினேன்: ஸ்டாலின்
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினேன்: ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கியதாக ஸ்டாலின் கூறினார். திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு இன்று நேரில் சென்று, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினார். மேலும், அந்தக் கடிதத்தின் பிரதியை சட்டப்பேரவை தலைவரிடமும் வழங்கினார். […]





