Tag: கிளிநொச்சி

மணல் கடத்தல்

போலியான அனுமதிப் பத்திரத்தைத் தயாரித்து டிப்பர் வாகத்தில் மணல் கடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறிய லில் வைகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று உத்தரவிட் டது. முல்லைத்தீவு, புதுக் குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மணல் எற்றிச்சென்ற டிப்பர் வாகனங்கள் மறித்து சோதனையிடப் பட்டன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிக்கன்ன வின் உடனடி முறிய டிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி […]

பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர். குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் […]

ஆனையிறவில் சிதறிக்கிடக்கும் மோட்டார் செல்கள்

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி ஆனையிறவு கடல் நீரேரி வற்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவிலான மோட்டார் செல்கள் பரவலாக காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது குறித்த பகுதி நீரின்றி காணப்படும் நிலையில் பெருமளவில் மோட்டார் செல்கள் மண்ணில் புதையுண்ட நிலையிலும், துருப்பிடித்தும் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில், […]

அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம்: சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் ஆதங்கத்தை வெளியிட்ட உறவுகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக […]

வடக்கு மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது

கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்கின்ற ஒருவகையான போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால், குறித்த சந்தேகநபர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகிப்பதாக குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காய் பொங்கல் பொங்கி வழிபாடு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டி விசேட பொங்கல் வழிபாடு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று மேற்படி வழிபாட்டு நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் […]

‘பூர்வீக நிலத்திற்குச் செல்ல அனுமதிக்கவும்’ – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி

தங்களது பூர்வீக நிலத்தில் மீள்குடியேற அனுமதிக்கக்கோரி 29ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைதீவு மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர். கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த பேரணி, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபரிடமும் மகஜரும் கையளிக்கப்பட்டது. இரணைதீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான […]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி!

கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும் தமிழ் சமூகத்தை கொந்தளிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த […]

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு: 4 பெண்கள் கைது

கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள கிராமப் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபச்சார நிலையமொன்றை பொலிஸார் இன்று (புதன்கிழமை) சுற்றிவளைத்ததில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் குறித்த […]

ஜனநாயக போராட்டத்திற்கு மதிப்பளிக்காவிடின் தமிழினம் வேறு வழியை கையாளும்

மனிதாபிமான போராட்டம் தீர்வின்றி தொடருமாயின், அது எமது இனத்தவரை வேறு வழிக்கு திசைதிருப்புவதற்கே வழிவகுக்கும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 66ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவர், “இந்த ஜனநாயக […]