இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறின. அதோடு இந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாகவும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தாமாக […]
Tag: இலங்கை
இலங்கையை இறுக்கிப்பிடிக்கத் தயாராகிறது ஐ.நா.!
உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு ஆமைவேகத்தைக் கடைபிடித்துவருவதால் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் இன்றைய தினம், இலங்கை அரசுக்குக் கடுந்தொனியிலான செய்தியொன்று விடுக்கப்படும் என்றும், அதுவே ஐ.நாவின் இறுதி எச்சரிக்கையாகக்கூட அமையலாம் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டுவார கால பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள […]
இலங்கையில் கடித்த நாய்; பிரான்ஸில் உயிரிழந்த சிறுவன்!
இலங்கையில் குட்டி நாய் ஒன்றிடம் கடிவாங்கிய சிறுவன் பிரான்சில் உயிரிழந்தான். கிழக்கு பிரான்ஸ் நகரான ரோனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்து வயதுச் சிறுவன் தன் குடும்ப சகிதம் விடுமுறையைக் கழிக்கவென இலங்கை வந்தான். திக்வெல்லையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் அவனது காலைப் பதம் பார்த்தது. குட்டி நாய் என்பதால் அது குறித்து அவனது குடும்பத்தினர் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. நாடு திரும்பிய அவன், கடந்த […]
காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? – தேடி அலையும் உறவினர்களில் ஐவர் பெருந்துயரால் மரணம்!
காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துள்ள போதிலும் இது விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய, சர்வதேச ரீதியில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உறவினர்களைத் தேடிப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களுள் 5 பேர் கடந்த ஆறு மாத காலத்துக்குள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினமும் தாயொருவர் மரணடைந்துள்ளார். கொழும்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைவானில் […]
ஜெனீவாவில் வைகோவை சிங்களவர்கள் தாக்க முயன்றதை அடுத்து வைகோவுக்கு பலத்த பாதுகாப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ 2 முறை பேசினார். தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, […]
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ அசிஸ் போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கடத்தல்காரர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இருந்து அசிஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு சிலர் கடத்த முயல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]
இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத்தளமாக சீனா பயன்படுத்தாது: சீன தூதுவர்
இலங்கையை தாம் ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை அறிய முடியும் என்றும் கூறினார். இலங்கையில் சீன […]
இலங்கை பங்களாதேஷ் இடையே 12 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பங்களாதேஷிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ் உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. முதலாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கிடையே தரக் கட்டுப்பாடு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டது. அதில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்நாட்டின் கைத்தொழில்துறை அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதேவேளை, பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், விவசாய ஒத்துழைப்புக்கள், […]
செய்த குற்றங்களுக்கு இப்போது தண்டனை! – வேதனையடைகின்றார் நாமல்.
எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தண்டனையை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அந்தக் […]
ஜுலை 13இல் பங்களாதேஷ் பறக்கின்றார் மைத்திரி!
பங்களாதேஷ் பிரதமர் ஷிக் ஹஸினாவின் அழைப்பையேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும், அந்த மாதம் 16ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்துக்கு பங்களாதேஷ் ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிவாரண உதவியாக வழங்கியிருந்தது எனவும், அந்த உதவியைத் தொடர்ந்து ஜனாதிபதியை தனது நாட்டுக்கு […]





