தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கும், ராஜபக்ஷவினருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது. எனவே, இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் கீதா குமாரசிங்கவுக்கு ஒருவிதத்திலும், மற்றையவர்களுக்கு ஏனைய விதத்திலும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் […]





