Tag: அமைச்சரவை

ரணில் விக்கிரமசிங்க

ரணிலின் கோரிக்கையை மறுத்த அமைச்சரவை

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க மறுத்துள்ளது.குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்காக அனுமதி கோரும் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு […]

புதிய அமைச்சரவை விவரங்கள்

அரச தலைவர் செயலகத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்பாக புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்றது. அதன் முழுமையான விவரங்கள் வருமாறு: 1.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர். 2.மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர். 3.திலக் மாரப்பன – வெளிவிவகார அமைச்சர் 4.ஹரின் பெர்னான்டோ – தொலைத்தொடர்புகள்,டிஜிட்டல் உட்கட்டமைப்பு, […]

புது வருடத்துக்கு முன்னர் மாற்றம்.!

எதிர்வரும் சிங்களப் புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவி

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின் டிடிவி தினகரன் ஆட்சியை கைப்பற்றும் மன நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின், கட்சியை தன் வசம் வைத்திருந்த சசிகலா, சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், டிடிவி தினகரணை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்து சென்றார். ஆனால், பல களோபரங்களுக்கு பின் தற்போது ஆட்சி மற்றும் கட்சி இரண்டுமே எடப்பாடி கையில் இருக்கிறது. அதிமுக தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் என்ற […]

செப் முதலாம் திகதி தொடக்கம் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளது. இதேவேளை, இதற்கெதிராக கைது செய்யும் சட்டநடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இத்துறையை சார்ந்தவர்களின் நலன் கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வற்காக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2017.07.11 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க 2017 […]

மெல்லிய பொலித்தீன் பாவனைக்கு தடை

மெல்லிய பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பில் சுற்றாடல் துறை அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் அமைச்சரவை ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தேசிய , மத […]

நிறைவுக்கு வந்தது தபால் ஊழியர்களின் போராட்டம்

கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதியையடுத்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமக்கு நியாயமான பதில் கிட்டியதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார். தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் […]

அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள்: ஜனாதிபதி

அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் அவற்றைப் பொது இடங்களில் பேசும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சரத் பொன்சேகாவுக்கு கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. அவரை அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கும் செயலணிக்குப் பொறுப்பாக நியமிப்பது […]

மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறைப்படியே- அரசாங்கம்

காலாவதியாகவுள்ள வட மத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நடைமுறையிலுள்ள விருப்பு வாக்கு முறைமையின் அடிப்படையிலிலேயே இடம்பெறும் என உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார். இந்த மூன்று மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இதனால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் இந்த தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பான […]