பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *