பாதீட்டுக்கான வாக்களிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மாலை நான்கு மணியளவில் கலந்துரையாடவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பாதீட்டுடின் இறுதி வாக்களிப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று பிற்பல் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஜே.வீ.பி ஏலவே அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.





