அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றுக்கு மாற்றம்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு அரசியல் கைதிகள் சார்பில் கடந்த செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தது.

அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் வழக்கினை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *