ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபி ,அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1984.12.02 ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டு படுகொலை செய்திருந்தனர்.

இந்த படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இராணுவத்தினர் இடித்து அழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *