தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெறவிருந்த இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நாடாளுமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News