பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் இணைத் தலைமை வகிப்பார்
2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்கப் பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்தச் சபை நிறுவப்பட்டது.
எனினும், அந்தச் சபையின் செயற்பாடு இயங்கா நிலையிலேயே இருந்து வந்தது.
எனவே , மேற்படி சட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்றும், இது சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது.
இதன்போது டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறப்படவுள்ளது.
ஆயிரம் பில்லியன் ரூபா கோரும் குறைநிரப்புப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு எதிரணி முழு ஒத்துழைப்பை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





