தகவல் அறியும் உரிமைச் சட்டம் : அரச அதிகாரிகளுக்கு தெளிவில்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் : அரச அதிகாரிகளுக்கு தெளிவில்லை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி காணாமல் போன தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய மட்டக்களப்பிலுள்ள பெண்கள் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்க அலுவலகங்கள் முறைப்பாடுகள் செய்தும், எண்ணற்ற ஆணைக்குழுவில் வாக்குமூலங்களை கொடுத்தும் எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், புதிததாக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை பயன்படுத்த மக்கள் தீர்மானித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டம் அமுலுக்குவந்த பின்னர் மாவட்ட செயலகம், மாகாண மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றில் தமது உறவுகள் தொடர்பான விபரங்களை கோரி, 15 பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

எனினும் இந்த சட்டம் குறித்து பெரும்பாலான அரச அதிகாரிகளுக்கு தெளிவற்ற நிலையே காணப்படுவதாக முறைப்பாடு செய்த ஏ.அமலநாயகி என்ற பெண் கூறியுள்ளார்.

இதேவேளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாட்டிற்கு புதிததான ஒன்றெனவும் ஒரே தடவையில் 100 வீதம் அதனை அமுல்படுத்த முடியாது எனவும் வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites