முஸ்லிம்களின் வாக்குகளால் சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் – மஸ்தான் எம்.பி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முஸ்லிம்களின் வாக்குகளால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மே தினம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களுடான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் 12 வீதமாக காணப்பட்டது. எனினும், தற்போது, 4 வீதமாக காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். ஆனால், மீண்டும் நல்லாட்சியில் ஜனாதிபதியை முஸ்லிம்கள் ஆதரிப்பதால் கட்சியின் வாக்குவீதம் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணாப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்காட்சியை திருகோணமலை மாவட்டத்திலும் பலப்படுத்த தேவையான நடவடிக்கைளை முன்னாள் முதலைமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான நஜீப் ஏ மஜீத்துடன், இணைந்து முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளையும் தாம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி, மாகாண சபை உறுப்பினர் நஜீப் ஏ.மஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *