மன்னார் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு ￰கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பணவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பணவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும், தமது மேலதிக நேரக்கொடுப்பணவை வழங்க கோரி இன்று திங்கட்கிழமை(14) காலை 8 மணி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகளுக்காக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மாதாந்த கிளினிக் உற்பட பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக மன்னார் நகர் உள்ளடங்களாக தூர இடங்களில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த ஆண்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,

தாய்மார்கள், மாற்றாற்றல் கொண்டோர் உள்ளடங்களாக அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் ஏறமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் குறிப்பாக மாதாந்த பரிசோதனைக்காக வருகைதந்த 50 மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றதுடான் திரும்பி சென்றனர் தங்களுக்கு எந்தவித முன் அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் தூர இடங்களில் இருந்து ஒரு உயிரை வயிற்றில் சுமந்து வரும் தங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் மேலும் சுமையை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்தனர்