ஜுலை 13இல் பங்களாதேஷ் பறக்கின்றார் மைத்திரி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பங்களாதேஷ் பிரதமர் ஷிக் ஹஸினாவின் அழைப்பையேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும், அந்த மாதம் 16ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்துக்கு பங்களாதேஷ் ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிவாரண உதவியாக வழங்கியிருந்தது எனவும், அந்த உதவியைத் தொடர்ந்து ஜனாதிபதியை தனது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கின்றார் எனவும் இலங்கையிலுள்ள பங்களாதேஷ் தூதுவர் ரிபல் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *