அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து திருப்தி கொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இச் சந்திப்பில், குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் ரொஸ்கம் தலைமையில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களான டேவிட் பிரைஸ், ஜெரால்ட் ஈ கொனோலி மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர் அட்ரியன் ஸ்மித் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை மீது அமெரிக்கா நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News