காணிகளை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பிலும் தொடர் போராட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
காணிகளை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பிலும் தொடர் போராட்டம்

ராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரியும் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதோடு, புதுக்குடியிருப்பில் கையகப்படுத்தப்பட்டுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரி இம்மக்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை நுழையவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துரையாடிய பின்னர், சுமார் 10 மணியளவிலேயே பிரதேச செயலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites