முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொள்ளைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் கொள்ளைக்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் கல்லடி பகுதியில் உள்ள முன்னாள் ஈபிடிபி உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருமாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் முச்சக்கரவண்டியில் சென்று வேவு பார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டே இந்த கொள்ளைச்சம்பவங்களை திட்டமிட்டு மேற்கொள்வதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸ் பரிசோதகர் பண்டார தெரிவித்தார்.

இதன்போது கையடக்க தொலைபேசிகள் மற்றும் வீடுகளை உடைப்பதற்கான பொருட்களும் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று இரவு மூன்று வீடுகளை உடைத்து கொள்ளையிடுவதற்கான அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites