முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணியில் வசிக்கின்ற சிங்கள மக்களுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா யில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு நீரை வழங்கும் அபிவிருத்தித் திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன என மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 111ஆவது அமர்வு நேற்றையதினம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண முதல்வர் கொழும்பு அரசு மாகாணத்தில் உள்ள கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்கள் தொடர்பான இடங்களை அடையாளப்படுத்துவதற்கு மாகாண சபையின் கருத்தைக் கேட்பது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலையை மீள இயக்கும் முயற்சியாக இந்த வர்த்தமானி அறிவித்தலில் அதனையும் உள்ளடக்கவேண்டும். அரசு அபிப்பிராயம் கேட்ட இந்த அறிக்கையில் வெறுமனே வெலி ஓயா போன்ற இடத்தையே குறிப்பிட் டுள்ளனர்.





