தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தெஹிவளை- “ஏக்வாடஸ்” விளையாட்டு மைதானம் அருகே சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவானது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த 34 வயதுடைய பொதுமகன் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.