கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி ஏ9 வீதியில் தட்டுவன் கொட்டிப் பகுதியில் இடம்பெற்றது.
அதே இடத்தைச் சேர்ந்த சிங்கராசா செந்தில்நாதன் மற்றும் கரவெட்டி கரணவாயைச் சேர்ந்த நல்லததம்பி துஸ்யந்தன் (வயது –36) ஆகியவர்களே உயிரிழந்தனர்.
மேலும் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் அங்கிருந்து உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.





