வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு: இறுதி அறிக்கை தயார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வட. மாகாண அமைச்சர்கள் மீதான முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்துவந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட. மாகாண சபையின் 93ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. அதன்போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், வட. மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு முதலமைச்சர் விசாரணை குழு ஒன்றை உருவாக்கினார். அந்த குழுவின் இறுதி அறிக்கை கிடைத்துவிட்டதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “கடந்த 19ஆம் திகதி குறித்த இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி அந்த அறிக்கை தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மேற்படி அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமர்வில் அறிவிக்கப்படும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *