பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *